ஒருவழியாக வெளியாகியது ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி!
இயக்குனர் அட்லீ தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்கள் கொடுத்த நிலையில் பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த திரைப்பம் வரும் ஜுன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதனையடுத்து சமீபத்தில் இந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த சூழலில் தற்போது படத்தின் வெளியீட்டு திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதன்படி செப்டம்பர் 7 ஆம் திகதி ஜவான் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலதாமதம் ஆனாலும் ஜவான் படம் தரமாக வெளியாகும் என ஷாருக்கான் மற்றும் அட்லீ ரசிகர்கள் நம்புகிறார்கள்.