மனித உருவில் மிருகமாய் இருக்கும் மூவர் : இயக்குனர்களில் இவர்கள் வேற ரகம்!
இயக்குனர்களில் சிலர் தங்களுடைய படைப்புகள் தனியாக தெரிய வேண்டும் என்று பல புதிய முயற்சிகளை எடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதை பாணி இருக்கும். காமெடி கமர்சியல் என தங்களுடைய பாதைகளை தாங்களே உருவாக்கிக் கொள்வார்கள். அப்படி சில இயக்குனர்கள் தாங்கள் நினைத்ததை படமாக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள், அப்படியான மூன்று இயக்குனர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றிமாறன்: இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் அடையாளம் என்று சொல்லலாம். தான் நினைத்த காட்சி வர வேண்டும் என்பதற்காக நடிகர்களை உலுக்கி எடுக்கக் கூடியவர். அவருடைய நான்கு வருட உழைப்பிற்கு கிடைத்த பலனாக இன்று விடுதலை திரைப்படம் தமிழகம் எங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
பாலா: இயக்குனர் பாலாவுடன் படம் பண்ண முன்னணி ஹீரோக்களே தயங்குவார்கள். சினிமாவில் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபிப்பதற்காக வேண்டுமானால் ஒரு சில ஹீரோக்கள் அவர்களாகவே இவரிடம் மாட்டிக் கொள்வது உண்டு.
மிஷ்கின்: இயக்குனர் மிஷ்கினும் பாலாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்கள் தான். மிஷ்கின் எதார்த்தமான கதைகளை எடுக்க கூடியவர். ஆனால் இவருடைய படங்களின் காட்சிகள் அதிக வன்முறையை காட்டுவது போல் சில நேரங்களில் அமைந்து விடும்.