லோகேஷுக்கு தலைவலியாக மாறிய வில்லன் நடிகர்!

லோகேஷுக்கு தலைவலியாக மாறிய வில்லன் நடிகர்!
  • PublishedMarch 31, 2023

லோகேஷின் விக்ரம் பாணியில் பல நட்சத்திரங்கள் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. விஜய்,  திரிஷா,  அர்ஜுன்,   மிஷ்கின்,   கௌதம் மேனன்,   சஞ்சய் தத்,   பிரியா ஆனந்த் மற்றும் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். லியோ படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

இந்நிலையில் ஹைதராபாத் செட்டியூலை விஜய் கேன்சல் செய்து விட்ட நிலையில் இப்போது லியோ படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடைபெற்று வருகிறது. அதாவது விஜய்யின் வீடு மற்றும் பிரசாந்த் ஸ்டூடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த இருக்கின்றனர்.

இந்த சூட்டிங் தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமே அந்த வில்லன் நடிகர் தானாம்.  ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார்.

மேலும் அர்ஜுன் நடிப்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமே புகைப்படத்துடன் வெளியிட்டது. ஆனால் அர்ஜுன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத காரணத்தினால் லியோ படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *