எச் வினோத்துடன் கூட்டணி அமைக்கும் உலக நாயகன்!

எச் வினோத்துடன் கூட்டணி அமைக்கும் உலக நாயகன்!
  • PublishedJune 13, 2023

கமலஹாசன் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த சூழலில் கமல் தனது அடுத்தடுத்த பட வேலைகளில் மிகவும் பிசியாக இருக்கிறார்.  தனது தயாரிப்பு நிறுவனம் மூலமும் நிறைய படங்களை தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் ராஜ்கமலின் 51 வது படத்தில் கமலே நடிக்க இருக்கிறார். அதுவும் முதல்முறையாக அஜித் பட இயக்குனர் ஒருவருடன் கூட்டணி போட இருக்கிறார்.

vinoth-kamal

இதன்படி கமலின் 233 வது படம் ஹெச் வினோத் கைவசம் சென்றுள்ளது.  வினோத்,  கமல் கூட்டணி போட்டுள்ள படத்தின் கதை அரசியல் திரில்லர் படமாக உருவாக இருக்கிறதாம்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் விஜய் சேதுபதி,  காயத்ரி சுரேஷ் ஆகியோரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *