ஐந்து மாதங்களில் 109 படங்கள் வெளியீடு : ஆனால் இரண்டு படங்கள் மாத்திரமே கல்லாக்கட்டிய பரிதாபம்!

ஐந்து மாதங்களில் 109 படங்கள் வெளியீடு : ஆனால் இரண்டு படங்கள் மாத்திரமே கல்லாக்கட்டிய பரிதாபம்!
  • PublishedJune 13, 2023

இவ்வருடம் பிறந்து முதல் ஐந்து மாதங்கள் ஓடிவிட்டது. இந்த ஐந்து மாதங்களில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி  இதுவரை  109 படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஆனால் இந்த படங்களில் வெறும் இரண்டே படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்ப்பு அளவு கலெக்ஷன் ஆக இருக்கிறது.

அதை தவிர பெயர் சொல்லும் அளவுக்கு ஓடியது கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் தான்.  அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படமும் சுமாராக ஓடியது.

பின் ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம் ஏ சென்டரில் மட்டுமே நன்றாக ஓடியது. அதைத் தவிர மற்ற எந்த படங்களும் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. இப்படி படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணம் திரைப்படங்களை ஒரே மாதிரி எடுப்பது தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *