ஸ்ரித்திகாவை திருமுருகன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாரா??

ஸ்ரித்திகாவை திருமுருகன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாரா??
  • PublishedFebruary 1, 2024

மலையாள நடிகையும், மாடலுமான ஸ்ரித்திகா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய படிப்பை முடித்த பின்னர், தந்தையின் பிசினஸ் காரணமாக சென்னையில் அவருடைய குடும்பம் செட்டில் ஆனது.

நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டே.. திரைப்படங்களிலும் நடிக்க முயற்சி செய்தார். அந்த வகையில் இவர் நடித்த வெண்ணிலா கபடி குழு, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வேங்கை, போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஹீரோயின் ஆசையில் இருந்த இவர், 2007 ஆம் ஆண்டு முகூர்த்தம் என்கிற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, போன்ற சீரியல்களில் அடுத்தடுத்து நடித்தார். இவர் இதுவரை 10-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருந்தாலும், இவருடைய கேரியரில் மறக்க முடியாத சீரியலாக உள்ளது நாதஸ்வரம் சீரியல் தான்.

சன் டிவி தொலைக்காட்சியில், இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான இந்த நெடுந்தொடர், 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை 5 வருடங்கள் டாப் 3 trp ரேட்டிங்குடன் ஓடியது. இந்த சீரியலில் மலர் கொடி என்கிற கதாபாத்திரத்தில் தான் ஸ்ரித்திகா நடித்து வந்தார்.

தற்போது திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரித்திகா, சமீபத்தில் தன்னை மிகவும் பாதித்த வதந்தி குறித்து கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதில் நாதஸ்வரம் சீரியலில் நடித்த போது தன்னையும், இயக்குனர் திருமுருகனையும் சேர்த்து வைத்து சிலர் வதந்திகளை கொளுத்தி போட்டது தனக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

யாரும் என்னை தவறாக பேசிவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். என்னுடைய அம்மாவும் – அப்பாவும் அப்படி சொல்லித்தான் சிறு வயதில் இருந்தே வளர்த்தார்கள். ஆனால் நாதஸ்வரம் சீரியலில் நடித்த போது, என்னை இயக்குனர் திருமுருகன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக வதந்தி வெளியானது.

அந்த சமயத்தில் இப்படி பரவிய வதந்தியால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *