ராமசாமிக்கு தணிக்கைக்குழு அளித்த சான்று இதுதான்
![ராமசாமிக்கு தணிக்கைக்குழு அளித்த சான்று இதுதான்](https://cinemazda.com/wp-content/uploads/2024/02/Screenshot-2024-02-02-122144-745x470.jpg)
‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.
இப்படம் நாளை (பிப்ரவரி 2) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், இப்படம் 600 திரையரங்களுக்கு மேல் ரிலீஸாக உள்ளது.