வெற்றி இயக்குனருக்கு இன்று பிறந்தநாள்!

வெற்றி இயக்குனருக்கு இன்று பிறந்தநாள்!
  • PublishedMarch 14, 2023

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை மனதில் நிலைநிறுத்தும் வல்லமைக் கொண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் லோகேஷ் போல் ஓர் இயக்குனர் அமைய வேண்டும் என சினிமா வட்டாரங்களில் பேசும் அளவிற்கு தனது திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் தற்போது புதிய திட்டங்களை கையில் எடுத்துள்ளார். அதாவது,  தனது முந்தைய திரைப்பட கதாபாத்திரங்களை கொண்டு லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் என்ற புதிய சினிமா உலகம் ஒன்றை உருவாக்க முயற்சித்து வருகிறார்போலும்.

தற்பொழுது ஹாலிவுட்டில் உள்ள மார்வெல் சினிமா டிக்கெட் யூனிவர்ஸ் போல லோகேஷின் கதாபாத்திரங்களுக்கும் தனி இரசிகர் பட்டாலாமே உள்ளது.

லோகேஷ் உருவாக்கிய திரை கதாபாத்திரங்களான டில்லி,  ஏஜெண்ட் விக்ரம்,  ரோலக்ஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு தனி ரசிகர் வட்டம் உருவாகி உள்ளதால் இந்த கதாபாத்திரங்களை தனித்தனியாக திரைப்படமாக்கும் திட்டத்திலும் இருக்கிறாராம்.

மேலும் தனது திரைப்படங்களில் நடிக்கும் சிறிய கதாபாத்திரங்களை கூட சுவாரஸ்யமாக ஒரு வலிமை மிகு கதாபாத்திரமாக மாற்றும் வல்லமை கொண்ட லோகேஷ் கனகராஜ் ஏஜென்ட் டீனா போன்ற சில துணை கதாபாத்திரங்கள் மூலமாகவும் தனது சினிமாடிக் யூனிவர்சுக்கு பலம் சேர்த்துள்ளார்.

தற்பொழுது தமிழின் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான லியோ திரைப்படத்தை உருவாக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இன்னும் பல மைல்கள் பயணிக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *