பப்ளிசிட்டிக்காக அதை பண்ணல.. சர்ச்சையான வீடியோ குறித்து நடிகை விளக்கம்

பப்ளிசிட்டிக்காக அதை பண்ணல.. சர்ச்சையான வீடியோ குறித்து நடிகை விளக்கம்
  • PublishedFebruary 6, 2024

நடிகை சைத்ரா பிரவீன் தனது பட விழாவிற்கு அணிந்து வந்திருந்த ஆடை பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அந்த வீடியோ வைரலாகவும் பரவியது.

நடிகைகள் பொதுவெளியில் அணிந்து வரும் ஆடைகள் அவ்வப்பொழுது பெரும் சர்ச்சைகளை கிளப்பும் நிலையில், மலையாள மொழியில் வளர்ந்து வரும் நடிகையான சைத்ரா பிரவீன் அவர்கள் தன்னுடைய திரைப்பட விழா ஒன்றுக்கு அணிந்து வந்திருந்த புடவை, கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. பலரும் அவர் தனது பப்ளிசிட்டிக்காக தான் அப்படி செய்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Life line of bachelor’s என்ற மலையாள படம் அண்மையில் வெளியானது, இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் நாயகிகளில் ஒருவர் தான் சைத்ரா பிரவீன். இந்த திரைப்படத்திற்கான விழா கேரளாவில் உள்ள ஒரு மாலில் நடந்த பொழுது அங்கு டிரான்ஸ்பரண்டான சாரி ஒன்றை அணிந்து வந்திருந்தார் சைத்ரா பிரவீன். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது, மேலும் தன்னை பப்ளிசிட்டி செய்து கொள்ளவே அவர் இவ்வாறு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் அது குறித்து மனம் திறந்து உள்ள நடிகை சைத்ரா பிரவீன், நான் பப்ளிசிட்டிக்காக அப்படி செய்யவில்லை, அது என் தாயின் புடவை, சென்டிமென்டாக தான் அந்த புடவையை நான் கட்டிச் சென்றேன்.

அந்த புடவையில் சென்ற பொழுது எனது தாய்க்கு நான் வீடியோ கால் செய்து காட்டினேன். அவர் நான் இந்த கருப்பு சேலையில் மிகவும் அழகாக இருப்பதாக கூறினார். மேலும் என் தந்தை ஒரு டீச்சர், அவர் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்தாலே திட்டுவார்.

ஆனால் இந்த வீடியோவை பார்த்து அவர் என்னை திட்டவில்லை. நாம் என்ன ஆடை அணிந்திருந்தாலும், அதை உற்றுப்பார்ப்பவர்களை என்ன செய்யமுடியும் என்று கூறினார். திரைப்படங்களில் மெல்ல மெல்ல நடிக்க துவங்கி வரும் நான் ஒரு பல் மருத்துவர்.

சிறு வயது முதலே மாடலிங் துறையில் இருந்து வருகிறேன். எனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி சினிமாவில் உள்ள பாதுகாப்பை அவர்களுக்கு உணர வைத்த பின்னரே தற்பொழுது நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *