விஜய்யின் கடைசி பட டைரக்டர் இவரா…? அப்போ கன்பார்ம் ஹிட்டு தான்

விஜய்யின் கடைசி பட டைரக்டர் இவரா…? அப்போ கன்பார்ம் ஹிட்டு தான்
  • PublishedFebruary 6, 2024

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வருபவர் விஜய். இவர் நடிக்கும் படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக்குவித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் விஜய் நடிப்பில் லியோ, வாரிசு என இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த இரண்டு படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தன.

கோட் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே தன்னுடைய அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் தளபதி விஜய். அதன்படி தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள அவர், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால், அந்த இடைவெளியில் மற்றுமொரு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் விஜய். அதுதான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும்.

தளபதி 69 படத்தில் நடித்து முடித்த பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கு டிவிவி நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. அந்த பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத், அட்லீ ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது தெலுங்கு ஊடகங்களில் வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி வெற்றிமாறன் தான் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது.

வெற்றிமாறன் ஏற்கனவே நடிகர் விஜய்க்கு கதை சொல்லி இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் தளபதி 69 படத்தை இயக்கபோவதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கோலிவுட்டில் இதுவரை தோல்வி படங்களே கொடுக்காத இயக்குனராக வெற்றிமாறன் உள்ளதால், விஜய்யின் கடைசி படம் அவர் எடுத்தால் கன்பார்ம் ஹிட்டு தான் என தளபதி ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *