சித்தாவால் உலகளவில் கவனம் பெற்ற பாடகி… என்ன பாடல் தெரியுமா?

சித்தாவால் உலகளவில் கவனம் பெற்ற பாடகி… என்ன பாடல் தெரியுமா?
  • PublishedDecember 14, 2023

சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் ‘சித்தா’ படம் வெளியானது.

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘சித்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.30 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

சித்தா டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்ற உனக்குதான் பாடலில் உள்ள ‘என் பார்வை உன்னோடு’ வரியை சாரா பிளாக் என்கிற பாடகி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடி வெளியிட்டிருந்தார்.

மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற இந்த விடியோவை அவர் கணக்கிலேயே இதுவரை 1.9 கோடி பார்வைகளைக் கடந்திருக்கிறது. இந்த விடியோவை பலரும் தங்கள் கணக்கில் பகிர்ந்ததிலும் பல லட்சம் பார்வைகள் பார்க்கப்பட்டிருக்கும் என்பதால் உலகளவில் சென்றிருக்கிறார் சாரா!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *