ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் இரண்டு தாலி.. வெளிவந்த ரகசியம்

ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் இரண்டு தாலி..  வெளிவந்த ரகசியம்
  • PublishedDecember 14, 2023

சமீபத்தில் திருமணம் செய்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி நடிகை சங்கீதா கழுத்தில் இரண்டு தாலி இருப்பது குறித்து அவர்களுடைய திருமணத்திற்கு மேக்கப் செய்த பெண் சில ரகசியங்களை கூறியிருக்கிறார்.

ரெடின் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்போது இவருடைய திருமண ரகசியங்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதோடு ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சங்கீதாவின் கழுத்தில் இரண்டு தாலி எப்படி வந்தது?

அதில் இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்ததில்லை. அவருக்கு மைசூரில் படப்பிடிப்பு இருந்ததால் அந்த இடைவெளியில் தான் திருமணம் நடந்தது.

ரெடின் கிறிஸ்தவர் என்பதால் அந்த தாலியும், சங்கீதா இந்து என்பதால் அந்த தாலியும் சங்கீதா கலுத்தில் அணிந்து இருந்தார். இருமுறைப் படி திருமணம் நடைபெற்றதாகவும் முதலில் இந்து கோவிலுக்கு சென்றும், பிறகு சர்ச்சில் வைத்தும் இரண்டு முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது. சங்கீதா திருமண புகைப்படங்களை டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

பிறகு தான் இவர்களுடைய திருமண விஷயம் பலருக்கும் தெரிந்தது. ஏற்கனவே புகழ் இதுபோலத்தான் இரண்டு முறையிலும் திருமணம் செய்திருந்தார். அதையே இப்போது ரெடின் கிங்ஸ்லியும் பாலோ செய்திருப்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *