அசுர வேகத்தில் தளபதி 68… ரிலீஸ் தேதியை முடிவு செய்த விஜய்

அசுர வேகத்தில் தளபதி 68… ரிலீஸ் தேதியை முடிவு செய்த விஜய்
  • PublishedDecember 14, 2023

விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய தளபதி 68 ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, தாய்லாந்து, மீண்டும் சென்னை, துருக்கி, தற்போது ஹைதராபாத் என கேப் விடாமல் தளபதி 68 படப்பிடிப்பை நடத்தி வருகிறார் வெங்கட் பிரபு.

இதனால், அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் தளபதி 68 ஷூட்டிங் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

இதனால் தளபதி 68 ரிலீஸ் தேதியையும் விஜய் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி தளபதி 68 படத்தை 2024 ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியிட விஜய் பிளான் செய்துள்ளாராம்.

சம்மர், தீபாவளி என எதுவும் இல்லாமல், லியோ பாணியில் தளபதி 68 படத்தை வெளியிட படக்குழு யோசித்து வருகிறதாம். இதனிடையே ஜனவரி 1ம் தேதி தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 68 படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், மாளவிகா ஷர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *