மணப் பொண்ணுக்கு நச் முத்தம்… கோலிவூட்டின் பிரம்மாண்ட கல்யாணம்

மணப் பொண்ணுக்கு நச் முத்தம்… கோலிவூட்டின் பிரம்மாண்ட கல்யாணம்
  • PublishedJuly 2, 2024

வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. மாலத்தீவில் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், திருமணத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிம்பு, நயன்தாரா, சித்தார்த் என ஏகப்பட்ட கோலிவுட் பிரபலங்களுக்கும் தெலுங்கு திரையுலக பிரபலங்களான பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலருக்கும் அவர் திருமண அழைப்பிதழை நேரில் குடும்பத்துடன் சென்று வழங்கியுள்ளார்.

நடிகை திரிஷா நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரலட்சுமிக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகை ராதிகாவுடன் சேர்ந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு பொன்னியின் செல்வன் 2, லியோ படங்களில் நடித்த திரிஷா அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி, கோட் படத்தில் கேமியோ, மலையாளத்தில் டொவினோ தாமஸின் ஐடென்டிடி மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர் பிரபு, மீனா, அனிதா விஜயகுமார் என ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தனது முதல் மனைவி சாயா தேவிக்கு பிறந்த மூத்த மகள் வரலட்சுமிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே செம ஹேப்பியாக உள்ளனர். சங்கீத் நிகழ்ச்சியில் சரத்குமார் மற்றும் ராதிகா போட்ட செம டான்ஸ் வீடியோவில் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோலிவுட்டின் மிக பிரம்மாண்டமான திருமணமாக வரலட்சுமி சரத்குமார் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக சரத்குமார் மகள் திருமணம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *