கூலி டீசர்.. ரஜினியை கலாய்த்தாரா வெங்கட் பிரபு? அவரே கொடுத்த விளக்கம்
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
விரைவில் அப்பட பணிகள் துவங்க உள்ளது, அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கிளாசிக் திரைப்படங்களின் சில வசனங்களும் அதில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் ஒரு சர்ச்சையான வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில் இப்பொழுது வரும் படங்களின் ட்ரெய்லர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறது. மேலும் அந்த நடிகர்கள் ஏற்கனவே நடித்த பழைய படங்களில் இருந்து வசனங்கள் வைக்கப்படுகின்றது என்று கூறியிருந்தார்.
இந்த சர்ச்சையான வீடியோவை வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இணையவாசிகள் பலர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.
அதில் “நோ.. நோ.. நோ.. இது கமர்சியல் திரைப்படங்களை எடுக்கும் எங்களை போன்றவர்கள் பற்றியது தான். கார்த்தி கூறுவதும் ஒரு வகையில் உண்மைதான். நாங்கள் எங்களுடைய இந்த கமர்சியல் பாணியில் இருந்து வெளியேறி வேறு விதமாக படங்களை எடுத்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று அவர் கூறியுள்ளார்.
அதாவது, தான் லோகேஷ் அல்லது ரஜினியை குறிப்பிட்டு அதை பகிரவில்லை, கமெர்சியல் படங்கள் எடுக்கும் எங்களை பற்றியது அது என்று கூறியுள்ளார்.