வாடிவாசல் நிலை என்ன? வேறு ஹீரோவை ரகசியமாக சந்தித்த வெற்றிமாறன்…

இயக்குனர் வெற்றிமாறன் பல வருடங்களாகவே சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுக்க உள்ளதாக அறிவித்தார். இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் மும்மரமாக நடந்து வந்தது.
இந்த சூழலில் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தார். அவர் நடித்த கங்குவா படம் தோல்வியை தழுவியது. இப்போது ரெட்ரோ படத்தில் நடித்துள்ள நிலையில் விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
எனவே வாடிவாசல் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வெற்றிமாறன் வேறு ஒரு ஹீரோவை சந்தித்திருக்கிறாராம். அதாவது ஜூனியர் என்டிஆர் ஐ சந்தித்துதான் பேசியிருக்கிறார்.
ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுவதாக பேச்சுவார்த்தையில் நடந்தது. அதற்காகத்தான் இப்போது கலந்துரையாடி இருப்பார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இப்போது ஜூனியர் என்டிஆர் படத்தை வெற்றிமாறன் கையில் எடுத்தால் வாடிவாசல் படம் தள்ளி போகும். ஏனென்றால் வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தால் எப்படியும் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளாவது எடுத்துக் கொள்கிறார்.
ஆகையால் வாடிவாசல் முடித்த பிறகு ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்க உள்ளாரா இல்லை, முதலில் இந்த படத்தை இயக்குகிறார் என்பது விரைவில் தெரியவரும்.