நயனுக்கு மட்டும் இல்ல… விக்கிக்கும் எக்ஸ் – லவ்வர் இருக்காங்களே..

நயனுக்கு மட்டும் இல்ல… விக்கிக்கும் எக்ஸ் – லவ்வர் இருக்காங்களே..
  • PublishedFebruary 13, 2024

நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் கோலமாவு கோகிலா படத்தை எடுத்த போது அந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். அந்தச் சமயத்தில் இருவரும் காதலிக்க தொடங்கியிருந்தனர்.

அதன்பிறகு திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா பல காதல் தோல்விகளை சந்தித்திருக்கிறார்.

அதாவது சிம்புவுடன் சில காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நயன்தாரா அதன் பின்பு இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து நடன இயக்குனர் பிரபு தேவாவுடன் நயன்தாரா பழகி வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பிரபுதேவாவின் மனைவியால் பிரச்சனை ஏற்பட நயன்தாரா இந்த காதலையும் முடித்துக் கொண்டார்.

இதனால் மிகுந்த மனவேதனையில் சில காலம் சினிமாவில் இருந்தே நயன்தாரா ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு பீனிக்ஸ் பறவை போல் எழுந்து மிகப்பெரிய உயரத்தை அடைந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் வாழ்க்கையிலும் காதல் தோல்வி இருந்த உள்ளது.

அதாவது சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விக்னேஷ் சிவன் ஒரு பெண்ணை ஒன்பது வருடமாக காதலித்து வந்தாராம். தீபாவளி பண்டிகை அன்று தனது காதலியை அம்மாவிடம் அறிமுகம் செய்ய வீட்டுக் அழைத்து சென்றிருக்கிறார்.

பண்டிகை நாட்களில் கூட புடவை கட்டாமல் ஜீன்ஸ், டி-ஷர்டில் வந்தது அவரது அம்மாவுக்கு பிடிக்கவில்லையாம்.

அதோடு மட்டுமல்லாமல் காதலி மற்றும் அம்மா இருவருக்கும் இடையே செட்டாகவில்லையாம். சின்ன சின்ன விஷயங்களில் கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள மாட்டாராம். எங்களுக்குள்ளும் சுமுகமான உறவு இல்லாத காரணத்தினால் பிரேக் அப் செய்து விட்டதாக விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *