விடாமுயற்சிக்கு U/A சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்டு…

விடாமுயற்சி படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கியுள்ளது. ஏ சான்றிதழ் தவிர்க்கப்பட்டதால் பட குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இதில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தடையற தாக்க, மீகாமன், தடம், கலக தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
அதாவது இந்த படத்தை 16 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம். 16 வயதுக்கு உட்பட்டோர் பெற்றோர் துணையுடன் இந்த படத்தை பார்க்கலாம் என யு/ஏ சான்றிதழ் குறிப்பிடுகிறது. இந்தநிலையில் விடாமல் முயற்சி திரைப்படம் ஏ சான்றிதழை தவிர்த்திருப்பதால் பட குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்.