ஏகே 62 கைநழுவியமைக்கான காரணத்தை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்!
நடிகர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் பின்னர் அந்த படம் மகிழ்திருமேனியடம் கையளிக்கப்பட்டது. இதற்கு காரணமாக பல கதைகள் வெளியாகியிருந்தன. இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
தற்போது இந்த படம் கைநழுவியமைக்கான காரணத்தை விக்னேஷ் சிவன் முதல் முறையாக வெளியிட்டுள்ளார். ஏகே 62 கைநழுவியது என்னை பொறுத்தவரை ஏமாற்றம் தான் ஆனால் அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை.
இந்த படத்திற்காக நான் தயார் செய்திருந்த கதையில் இரண்டாம் பாதி தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அதனால் தான் என்னை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டனர் என்றும் விக்னேஷ் சிவன் நீண்ட நாட்களாக சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்ததை உடைத்துக் கூறியள்ளார்.
இந்த வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். அவர் கேரியரில் இந்த படம் மிகப்பெரிய திருப்பு முறையாக அமையும் என்றும் நம்புகிறேன்.
மேலும் ஏகே 62 படம் வெற்றிகரமாக முடிவடைந்து திரையிடும்போது அதை நான் அஜித் சார் ரசிகராக பார்த்து ரசிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.