முதல் முறையாக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விஜய் டீவி நட்சத்திரம்!

முதல் முறையாக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விஜய் டீவி நட்சத்திரம்!
  • PublishedJune 6, 2023

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெரும். ஆனால் கடந்த சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் மந்தமாகத்தான் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்குக் கொண்ட பலர் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். அந்த வகையில் வெள்ளித்திரைக்கு சென்றவர்தான் புகழ். இருப்பினும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துக்கொள்கிறார்.

இந்நிலைியல்,  கடந்த வாரம் விஜய்யின் கில்லி பட கெட்டப்பை புகழ் போட்டிருந்தார். எப்போதுமே புகழை குக் வித் கோமாளி செட்டில் உள்ளவர்கள் கேலி,  கிண்டல் செய்வது வழக்கமாக உள்ளது.

செஃப் வெங்கடேஷ் பட்டிடம் செல்லமாக புகழ் வம்பு இழுப்பார். அப்படி கடந்த வாரமும் வெங்கடேஷ் பட் புகழை அடித்து துவம்சம் செய்தார். மற்ற போட்டியாளர்களும் புகழை வச்சி செய்திருந்தனர்.

ஆனால் இதுவரை எந்த கெட்டப் போட்டும் மன்னிப்பு கேட்காத புகழ் தளபதி விஜய்யின் கில்லி பட கெட்டப் போட்டவுடன் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

ஏனென்றால் விஜய் கெட்டப்பில் இருக்கும்போது அடுத்தவர்கள் அடித்தார்கள் என்றால் ரசிகர்கள் தப்பாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் இவ்வாறு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *