ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அடுத்தடுத்து வெளிவரவுள்ள சில திரைப்படங்கள்!

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அடுத்தடுத்து வெளிவரவுள்ள சில திரைப்படங்கள்!
  • PublishedJune 6, 2023

இசையின் நாயகனாக இருக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பது தான் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

அப்படிப்பட்ட இவர் தற்போது பாலிவுட்,  ஹாலிவுட் என இவருடைய முத்திரையை பதித்து பிசியாக இருக்கிறார். இதற்கிடையில் இவருக்கு போட்டியாக  இசையால் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறவர் தான் அனிருத்.

இவருடைய இசைக்கு மயங்காதவர்களும்,  ஆடாதவர்களும் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறார். அதனால் ஏ ஆர் ரகுமான் அந்தப் பக்கம் பிசியாக இருப்பதால் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை இவர் கைவசம் வைத்துக் கொண்டார்.

ஆனாலும் இவருடைய இசை மட்டும் தான் வேண்டும் என்று சில முன்னணி நடிகர்கள் இவரை கமிட் செய்து விட்டார்கள். அதனால் தற்போது ஏ ஆர் ரகுமான் ஐந்து படங்களுக்கு இசையமைக்கிறார்.

அதில் முதலாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம்,  அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படம், இதற்கடுத்தப்படியாக,  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் லால் சலாம் படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருக்கிறார்.

இவற்றை தவிர, கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கும், தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஒன்றுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *