அந்த நாலு எழுத்து சேனலை வாங்கும் விஜய்? இது இல்லாம எப்படி அரசியல்…
எம்ஜிஆர் எப்படி புகழின் உச்சத்தில் இருந்து அரசியலில் நுழைந்தாரோ, அதேபோல் தமிழ் சினிமாவில் புகழிலும் மார்க்கெட்டிலும் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் தனது அரசியல் வருகையை அறிவித்து அமர்க்கள படுத்தியுள்ளார்.
பல வருடமாக பற்பல செயல்கள் செய்து பலமான அடித்தளத்தை போட்டு உள்ளார் விஜய்.
இளைய தளபதியின் மக்கள் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு முன்னணி கட்சிகள் சில விஜய் உடன் கூட்டணி வைக்க ஆர்வத்துடன் இருக்கின்றன.
கூட்டணி பற்றி தெளிவு படுத்தாத விஜய் தற்போது நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலுக்குப் பின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி தனது கொள்கைகள் பற்றி மக்களிடையே தீவிரமாக விவாதிக்க உள்ளாராம்.
சினிமாவை கொஞ்ச காலத்திற்கு ஓரம் கட்டி முழு நேர அரசியல்வாதியாக மக்களிடம் நெருங்க உள்ளார் விஜய்.
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வண்ணம் தனது கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மக்கள் அறியும் வண்ணம், மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள உள்ளார்.
அதற்கு அச்சாரமாக நியூஸ் சேனல் ஒன்றை துவக்க உள்ளதாக கூறியுள்ளார். புதிதாகத் தொடங்கினால் அனுமதி வாங்க சிரமம் என்பதால் ஏற்கனவே இருக்கும் வசந்த், மெகா மற்றும் கேப்டன் போன்ற சேனல்கள் வாங்குவது பற்றி பரிசீலிக்கபட்டு வருகிறது.
விரைவில் தளபதி டிவிக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இது பற்றி கூறிய விஜய் மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணி,
“ஏற்கனவே யூடியூப் சேனல் மூலம் மக்கள் மன்றத்தின் செயல்கள் பதிவிடப்படுகிறது என்றும் தற்போதைக்கு நியூஸ் சேனல் பற்றிய தகவல் தவறானது” என்றும் கூறியுள்ளனர்.