ஒரு கோடியை தூக்கி கொடுத்து பக்கா அரசியல்வாதியாக மாறிய தளபதி
நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அரசியலுக்கு சரியான ஆள் தான் இவரே என்று மக்களே சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு விஷயங்களாக செய்து வருகிறார் தளபதி.
கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே மாணவர்களின் கல்வி என்ற திட்டத்தை கையில் எடுத்து விட்டார். அதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி அளித்தார்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சிறுமி மரணத்திற்கு எதிராக குரல் கொடுத்தது, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் CAA திட்டத்திற்கு எதிராகவும் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இது மட்டும் இல்லாமல் நேற்று விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் பிரச்சனை கன்னித்தீவு போல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது போல், இந்த பிரச்சனைக்கு யாரு தான் முடிவு கட்ட போறீங்க என்று தலையை பிச்சிக்கும் அளவுக்கு இந்த கட்டிட பிரச்சனை இத்தனை வருடங்களாக இருந்தது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூபாய் ஒரு கோடி நிதி உதவி அளித்திருக்கிறார். நடிகராக சங்கத்திற்கு நிதி கொடுத்ததற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி இருக்கலாம்.
நடிகர் சங்க தேர்தலில் கடைசியாக ஓட்டு போட்டதோடு அந்த பிரச்சனை எதற்குமே விஜய் குரல் கொடுத்தது இல்லை. இப்போது அரசியலுக்கு வந்ததும் ஒரு கோடியை எடுத்து கொடுத்திருப்பது தான் விமர்சனங்களுக்கு காரணம்.
அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜய்க்கு நடிகர்களின் ஓட்டும் ரொம்ப முக்கியம். இதனால் தான் நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடியை கிள்ளி கொடுத்து இருக்கிறார். நடிகர் விஜய் வாங்கும் சம்பளத்திற்கு இந்த ஒரு கோடி எல்லாம் ஒரு கணக்கே இல்லை. இருந்தாலும் நடிகர் சங்கம் இப்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில், இந்த தொகை ரொம்ப பெரிய விஷயம் தான்.
விஜய் செய்த இந்த விஷயத்தை ஏன் அரசியல் ரீதியாக பார்க்க வேண்டும் எனவும் சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். அரசியலுக்கு வரப்போவதால் விஜய் சினிமாவை விட்டு விலக இருக்கிறார், அதனால் தான் நடிகர் சங்கத்துக்கு நிதி கொடுத்திருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. எப்படியோ இது மாதிரி நிதி கொடுத்து கட்டிடத்தை கட்டி முடிங்கப்பா, விஷாலுக்கு கல்யாணம் ஆகட்டும் என இணையவாசிகள் கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.