உதவி செய்ய வந்த தளபதியை இப்படியா பாடா படுத்துவீங்க? இவ்வளவு பொறுமைசாலியா நீங்க?

உதவி செய்ய வந்த தளபதியை இப்படியா பாடா படுத்துவீங்க? இவ்வளவு பொறுமைசாலியா நீங்க?
  • PublishedDecember 30, 2023

நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிவாரண உதவி செய்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஜய்யும் வெள்ள நிவாரண உதவி செய்ய முன்வந்துள்ளார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தளபதி விஜய் நெல்லை மாவட்டத்தில் உள்ள மாதா மாளிகைக்கு வந்தடைந்தார்.

இந்த நிகழ்ச்சி நடக்கும் மண்படத்திற்கு விஜய் வருகை தந்தபோது, கூட்டம் அலைமோதியது. அப்போது. அங்கிருந்த நிர்வாகி கதவை சாத்தினார்.

இதில், நடிகர் விஜய் தடுமாறி கீழே விழ முயன்றபோது, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் விஜய்யை தாங்கிப் பிடித்தனர். புஸ்ஸி ஆனந்த், கதவை சாத்திய நபர் மீது டென்ஷனாகி திட்டினார்.

அதன்பின்னர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.

இதேவேளை, மேடையில் நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு இருக்கும் போது ஏற்பட்ட சலசலப்பிலும் புஸ்ஸி ஆனந்த் ஆக்ரோஷப்பட்டார்.

உடனடியாக விஜய் நிவாரணம் கொடுப்பதை நிறுத்தி விட்டு அனைவரையும் பார்த்து, COOL COOL எனக்கூறினார்.

மேலும் ரசிகை ஒருவர் பொருட்களை வாங்காமல் செல்வி மட்டும் இருந்தால் போதும் எனக்கூறிவிட்டு பொருட்களை வாங்காமல் சென்றுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *