விஜய்க்காக லியோவில் இணையவுள்ள விஜய் சேதுபதி…!

விஜய்க்காக லியோவில் இணையவுள்ள விஜய் சேதுபதி…!
  • PublishedApril 5, 2023

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்ட லியோ படக்குழு, அடுத்து சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் படப்பிடிப்பை தொடர முடிவெடுத்துள்ளது.

இன்னும் 60 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், லியோ படத்திற்காக விஜய் சேதுபதி 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்துவரும் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். மேலும், இன்னும் 60 நாட்கள் தான் லியோ ஷூட்டிங் இருப்பதால், ஒன்று அல்லது இரண்டு ஷெட்யூலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Sethupathi: My Character In Master Is Pure Evil! | Vijay Sethupathi Opens Up About His Character In Master - Filmibeat

இந்நிலையில், லியோ திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் – லோகேஷ் – விஜய் சேதுபதி கூட்டணி மாஸ்டர் படத்தில் தெறிக்க விட்டிருந்தனர். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார். அப்போது முதல் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இதனால் லியோவிலும் விஜய் சேதுபதி இருந்தால் நன்றாக இருக்கும் என லோகேஷும் விஜய்யும் முடிவு செய்துள்ளார்களாம்.

அதனையடுத்து விஜய் சேதுபதியிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட விஜய் சேதுபதி லியோ படத்திற்காக 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். ஆனால், இப்படத்தில் நடிகராக இல்லாமல் பின்னணி குரல் கொடுப்பதற்காக மட்டுமே இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தில் கார்த்தியின் வாய்ஸ் ஓவரை மட்டும் பயன்படுத்தியது போல், லியோவில் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am like a kid whenever I stand in front of the camera: Vijay Sethupathi | Entertainment News,The Indian Express

ஆனால், ரசிகர்களோ விஜய் சேதுபதியும் லியோவில் நடித்தால் செம்மையாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர். லியோ திரைப்படம் லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அது உறுதியானால் வாய்ஸ் ஓவர் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் விஜய் சேதுபதி மிரட்டலாம் என கூறப்படுகிறது. லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *