மஞ்சுளாவுக்கு விஜயகுமார் செய்த துரோகம்… பயில்வான் சொன்ன சீக்ரெட்

மஞ்சுளாவுக்கு விஜயகுமார் செய்த துரோகம்… பயில்வான் சொன்ன சீக்ரெட்
  • PublishedFebruary 24, 2024

திரை பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய விஷயங்களை மீடியா முன் அம்பலப்படுத்துவது தான் பயில்வான் ரங்கநாதனின் முழு நேர வேலை.

தற்போது மஞ்சுளா விஜயகுமார் பற்றி இவர் கூறியிருக்கும் ஒரு விஷயம் புது பஞ்சாயத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

மஞ்சுளாவை விஜயகுமார் தன் முதல் மனைவி சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் இருக்கின்றனர். அதேபோல் மூத்த மனைவிக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

இதில் அனிதா மருத்துவராக இருக்கிறார். அவருடைய மகளுக்கு தான் சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

அதேபோல் கவிதாவும் ஒரே ஒரு படத்தில் நடித்ததோடு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

இதை பற்றி கூறியிருக்கும் பயில்வான் மூத்த மனைவியின் மகள்களை மட்டும் நன்றாக படிக்க வைத்து செட்டில் செய்த விஜயகுமார் மஞ்சுளாவின் மகள்களை மட்டும் நடிகைகள் ஆக்கிவிட்டார்.

அதேபோல் மஞ்சுளா தன்னுடைய பாதுகாப்பிற்காகத் தான் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால் தன் கணவரை விட அதிகமாக சொத்து பணம் வைத்திருந்தது இவர் தான்.

அதனாலேயே விஜயகுமார் ரஜினியை வைத்து படம் எடுக்கும்போது மஞ்சுளாவுக்கு சொந்தமான குட் லக் தியேட்டரை விற்றார்.

இப்படியெல்லாம் மஞ்சுளாவை விஜயகுமார் பயன்படுத்திக் கொண்டதாக பயில்வான் கூறியிருக்கிறார்.

மேலும் மூத்த மனைவியின் மகள்களை படிக்க வைத்த இவர் ஏன் மஞ்சுளாவின் மகள்களை டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதன் மூலம் விஜயகுமார் மஞ்சுளாவுக்கு துரோகம் செய்துவிட்டதாக அவர் புது குண்டை போட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *