நம்ம தளபதி 10ஆம் வகுப்பில் என்ன மார்க் வாங்கி இருக்காரு தெரியுமா?

நம்ம தளபதி 10ஆம் வகுப்பில் என்ன மார்க் வாங்கி இருக்காரு தெரியுமா?
  • PublishedMay 13, 2024

தளபதி விஜய் தன்னுடைய 10-ஆம் வகுப்பில், எவ்வளவு மார்க் எடுத்தார் என்கிற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் SA சந்திரசேகரின் மகன் என்கிற அடையாளத்தோடு ‘வெற்றி’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் விஜய்.

அடுத்தடுத்து தன்னுடைய தந்தை இயக்கத்தில் வெளியான சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த விஜய், பின்னர் பருவ வயதை எட்டியதும், நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

தற்போது சுமார் 200 கோடிக்கும் மேல் சம்பளம் பெரும் நடிகராக உயர்ந்துள்ளார். தளபதி தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு 200 கோடி சம்பளம் பெற உள்ளதாகவும், இதை தொடர்ந்து அவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு 250 கோடி சம்பளம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்து கூறி வரும் தளபதி, 10-ஆம் வகுப்பில் ஆவரேஜ் மாணவராகவே இருந்துள்ளார். அதன்படி, இவர் 10-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரும் தகவல்களின்படி, விஜய் 1100-க்கு 711 மதிப்பெண்களைப் பெற்ற ஆவரேஜ் ஸ்டுடென்ட்டாகவே உள்ளார்.
தமிழில் 155/200 மதிப்பெண்களும்,
ஆங்கிலத்தில் 133/200 மதிப்பெண்களும்,
கணக்கில் 95/200 மதிப்பெண்ணும்,
அறிவியல் 206/300 மதிப்பெண்களும்,
சமூக அறிவியல் 122/200 மதிப்பெண்களை பெற்றிருந்தார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *