ரிஹானாவை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த நடிகர் யார் தெரியுமா.. இதோ அவர் தான்…

ரிஹானாவை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த நடிகர் யார் தெரியுமா.. இதோ அவர் தான்…
  • PublishedMay 13, 2024

சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா அண்மையில் ஒரு நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார்.

அது யார் என அவர் தெரிவிக்காத நிலையில், அவர் இந்த ஹீரோ தான் என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார் பிரபல பத்திரிக்கையாளர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில், என்னுடைய முதல் திருமணம் முறிந்து போனது அனைவருக்கும் தெரியும், அண்மையில் தான் எனக்கு விவாகரத்து ஆனது. அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தற்போது தான் கைக்கு கிடைத்து இருக்கிறது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன். அந்த திருமணத்தை நிச்சயம் அனைவருக்கும் சொல்லித்தான் செய்து கொள்வேன் என்றார்.

தொடர்ந்து பேசிய ரிஹானா, ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னை கூப்பிட்டு நீங்கள் நல்லா நடிச்சீங்கனு சொல்லி நம்பர் கேட்டார், நானும் கொடுத்தேன் ஆனால், அதன் பின் தொடர்ந்து மெஸேஜ் பண்ணிட்டே இருந்தார்.

அவருடன் பேசும் போதே புரிந்துகொண்டேன் ஏதோ தப்பா இருக்கிறது. அதனால் அவரை பிளாக் பண்ணிட்டேன் என்று கூறிய ரிஹானா, அவர் யார் என்று சொல்லவிலலை.

இதுகுறித்து, பத்திரிக்கையாளரான வித்தகன் சேகர், தனது யூடியூப் பக்கத்தில்,

நடிகை ரிஹானா, ஒருவர் நடிகர் தப்பாக அழைத்தார் என்று கூறியிருந்தார். அந்த நடிகர் யார் என்று அவர் சொல்லவில்லை. அவர் ஒரு பெரிய நடிகர் தான், அந்த ஹீரோ யார் என்றால், ஒருவனுக்கு ஒருத்தி என்று சினிமாவில் கண்ணியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நடிகரின் மகன் தான் என்று நான் ஆராய்ந்து பார்த்ததில் தெரியவந்ததாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *