இந்த பொழப்புக்கு நீ பிச்சை எடுக்கலாம்… பயில்வானை விளாசிய விஷால்

இந்த பொழப்புக்கு நீ பிச்சை எடுக்கலாம்… பயில்வானை விளாசிய விஷால்
  • PublishedApril 15, 2024

ஒரு பெண்ணை பற்றியோ, கதாநாயகி பற்றியோ தவறாக பேசி யூடியூபில் பணம் சம்பாதித்து வருபவர்களை பார்த்தாலே எனக்கு கடுப்பா இருக்கும், இப்படி நீங்க சம்பாதிப்பதற்கு பதிலா கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம் என்று பயில்வான் ரங்கநாதனை விஷால் மறைமுகமாக திட்டினார்.

தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் ரத்னம். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இதில், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி உள்ள இத்திரைப்படம், ஏப்ரல் 26ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஷால், பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

இணையத்தில் பலர் என்னை ட்ரோல் செய்து வருகிறார்கள். அதைப்பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டது இல்லை. ஆனால், ஒரு பெண்ணை பற்றியோ, கதாநாயகி பற்றியோ தவறாக பேசி சிலர் யூடியூபில் பணம் சம்பாதித்து வருகிறார்கள் அவர்களைப் பார்த்தாலே எனக்கு கடுப்பா இருக்கும்.

அவங்க வீட்டிலும் பொண்டாட்டி, அம்மா, இருப்பார்கள். அப்படி இருக்கும் போது இன்னொரு பெண்ணை பற்றி பேச எப்படி உங்களுக்கு மனசு வருது என்று தெரியவில்லை. இப்படி நீங்க சம்பாதிப்பதற்கு பதிலா கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம்.

இதை அனைவரும் பாராட்டுவார்கள். இப்படி பேசுபவர்களை நான் வக்கிரமான புத்திக்கொண்டவர்கள் என்று தான் சொல்வேன் என்று பயில்வான் ரங்கநாதனை விஷால் மறைமுகமாக திட்டினார்.

விஷாலும் லட்சுமி மேனனும் காதலித்தார்கள். இருவருக்கும் திருமணம் நடைபெறும் நிலைமை வரை சென்றது. ஆனால் திடீரென்று அவர்களது திருமணம் நின்றுவிட்டது. இதனால் லட்சுமி மேனன் தனது சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்ப சென்றுவிட்டதாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசி இருந்த நிலையில் தற்போது விஷால் அவரை கடுமையாக திட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *