தங்க காசுகளை பரிசாக வழங்கிய விஷால் பட நடிகை!

தங்க காசுகளை பரிசாக வழங்கிய விஷால் பட நடிகை!
  • PublishedJune 22, 2023

சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் விஷாலுக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருந்து வருகிறது. ஆனால் விஷால் படத்தில் நடித்த நடிகைகள் பலரும் இப்போது மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார்கள்.

அந்த வகையில் விஷாலின் திமிரு படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் விஷால் பட நடிகை மட்டுமல்லாமல் அவரது அண்ணி ஆவார்.

இப்போதும் ஸ்ரேயா படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலாம் படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த படத்தில், வில்லியாக நடிக்கும் ஸ்ரேயா ரெட்டி  தன்னுடைய உதவியாளர்களுக்கு தங்க காசுகளை பரிசாக வழங்கி இருக்கிறார்.

நடிகைகள் இவ்வாறு தங்க காசு வழங்குவது இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் ஸ்ரேயா ரெட்டியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *