இளையராஜாவிற்கும் – ஜேம்ஸ் வசந்திற்கும் அப்படி என்ன பிரச்சினை?

இளையராஜாவிற்கும் – ஜேம்ஸ் வசந்திற்கும் அப்படி என்ன பிரச்சினை?
  • PublishedMarch 30, 2023

தற்போது இசைஞானி இளையராஜா மற்றும் ஜேம்ஸ் வசந்த் இருவருக்கும் பனிப்போரே நிலவி வருகிறது.

இளையராஜா கிறிஸ்துவ மதத்தை இழிவு படுத்துவதாக எண்ணி ஜேம்ஸ் வசந்த் அவரை மட்டமான மனிதன் என விமர்சித்தார்.

அதேபோல் ஜேம்ஸ் வசந்த்தும் நானும் சளைத்தவர் அல்ல என்று இந்து மதத்தை விமர்சித்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் இவர்களுக்குள்ளே இருக்கும் தீராத வன்மம் தான்.

இதைப் பற்றி தெரிந்த சினிமா விமர்சகர் அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் 15 வருடத்திற்கு முன் இளையராஜா மற்றும் ஜேம்ஸ் வசந்த் இருவருக்கும் இடையே நடந்த காரசாரமான நிகழ்வுகளை உடைத்து கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் படத்தில் ஜேம்ஸ் வசந்த் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. சொல்லப்போனால் இளையராஜா இசை அமைப்பது போலவே மனதை வருடும் பாடல்களாக இருந்ததால் இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாகவே மாறியது.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒரு காட்சியில் ‘சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும்’ என்ற இளையராஜாவின் பாடலை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பார்.

இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு இளையராஜாவிற்கு இந்த படத்தில் அவருடைய பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பது தெரியவந்து. ஜேம்ஸ் வசந்துக்கு அதிரடியாக ஒரு நோட்டீசை அனுப்புகிறார்.

அன்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதை மனதில் வன்மமாக வைத்துக் கொண்டு தான் இப்போது கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம். ஆனால் ஜேம்ஸ் வசந்த்தின் சமீப காலப் பேட்டிகளை பார்க்கும்போது இளையராஜா எப்போதுமே தலை மேல் ஒரு கொடுக்கை வைத்துக் கொண்டு எல்லாரையும் கொட்டிக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *