கமல்ஹாசனை பிரிந்தது ஏன் : வெளிப்படையாக பேசிய கௌதமி!

கமல்ஹாசனை பிரிந்தது ஏன் : வெளிப்படையாக பேசிய கௌதமி!
  • PublishedApril 17, 2023

நடிகர் கமல்ஹசன் கௌதமிக்கு முன்னதாக இரண்டுபேரை திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்தும் செய்தார்.

இதனையடுத்து கௌதமியுடன் லிவ்விஙிகில் வாழ்ந்து வந்தார். பின்னர் அந்த உறவும் முறிந்தது. இது குறித்து கௌதமி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதாவது,   கமல்ஹாசனுடன் தான் இறுதியாக வாழ்ந்த நாட்களில் சுயமரியாதையை இழந்து தான் வாழ்ந்தேன் என்று மனம் நொந்து சொல்லியிருக்கிறார். மேலும் கௌதமி அதற்கு முந்தைய கமல்ஹாசனின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்தது அனைவரும் அறிந்த விஷயம்.

அதில் தசாவதாரம்இ விஸ்வரூபம் போன்ற படங்களுக்கு கமலஹாசன் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கௌதமிக்கு கொடுக்கவில்லையாம். மேலும் கமலின் நடவடிக்கைகளும் மொத்தமாக மாறிப் போயிருந்ததாம்.

இதனால் தான் கமல்ஹாசனை விட்டு பிரிந்து விட்டதாக அவருடன் பல வருடங்கள் மனம் ஒத்து வாழ்ந்த கௌதமி சொல்லி இருக்கிறார். அப்போது மீடியாக்கள் இவர்கள் இருவரது பிரிவுக்கு நடிகை பூஜா குமார் தான் காரணம் என்று கூட சொல்லின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *