விஜய் ஏன் இப்படி ஆகிட்டார்? எல்லாம் அரசியல் தான் காரணமா?

விஜய் ஏன் இப்படி ஆகிட்டார்? எல்லாம் அரசியல் தான் காரணமா?
  • PublishedMarch 21, 2024

விஜய் GOAT படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்று இருக்கிறார். தமிழ்நாட்டைப் போலவே, கேரளாவிலும் அவருக்கு ரசிகர்கள் ரொம்ப அதிகம். எப்போதுமே அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு பிறகு முதல் முறையாக கேரளாக்கு சென்று இருக்கிறார். அதிலும் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகுகிறேன் என அறிவித்து இருக்கிறார். இதனால் இந்த முறை கேரளாவில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

விஜய் முதல் நாள் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு போனபோதே அந்த இடமே ஸ்தம்பித்து விட்டது. விஜய் ரசிகர்கள் ரவுண்ட் கட்டி வரவேற்றதில் அவருடைய காஸ்ட்லி கார் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து விஜயின் படப்பிடிப்பு நடக்கும் எல்லா இடங்களிலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து வருகிறார்கள்.

விஜய் கூட தன்னுடைய ரசிகர்களுக்காக படப்பிடிப்பு இடத்திலும் நேரம் ஒதுக்கி வருகிறார். அவர்களுடன் செல்பி எடுப்பது, பேசுவது என நேரம் செலவழித்து வருகிறார். தளபதிய அந்த ஊர்காரங்க கொண்டாடுவது, அவர்களிடம் அவர் பேசுவதும் லைட்டாக கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.

நேற்று கேரள ரசிகர்களிடம் விஜய் மனம் விட்டு பேசி இருந்தார். சேட்டா, சேச்சி நீங்க எங்க ஊர் நண்பா, நம்பி போல சிறந்தவங்க. உங்கள பார்ப்பதில் எனக்கு ஒரு பாடு சந்தோஷம் என மலையாளத்தில் பேசி அவர்களை திக்கு முக்காட வைத்து விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

தன்னை நேரில் பார்க்க வரும் ரசிகர்களை ரொம்பவும் அன்போடு வரவேற்று வருகிறார் விஜய். இதனால் கேரள ரசிகர்கள் ட்விட்டரில் தளபதி விஜய் என்னும் ஹேஷ் டாக்கை பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். கேரள மாநிலமே ஏதோ திருவிழா நடப்பது போல் கொண்டாட்டமாக மாறி இருக்கிறது.

எனினும் இதை ஒரு சிலர் சற்று வித்தியாசமாகத்தான் பார்க்கின்றார்கள். அதாவது விஜய் அமைதியின் மறு உருவமாக இருந்தார். இப்போது மாறி விட்டார். இதற்கு காரணம் விஜய் அரசியலில் இறங்கியது தான் என தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *