மலையாளத்தில் பேசி கேரள ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய விஜய்… தீயாய் பரவும் வீடியோ

மலையாளத்தில் பேசி கேரள ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய விஜய்… தீயாய் பரவும் வீடியோ
  • PublishedMarch 20, 2024

கேரளாவில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நடிகர் விஜய் அங்கு ரசிகர்களை சந்தித்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓணம் பண்டிகையில் நீங்கள் எந்த அளவுக்கு சந்தோசமாக இருப்பீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் முகத்தை பார்க்கும் பொழுது தனக்கு சந்தோசமாக இருக்கிறது என கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ளார்.

அவர் சென்ற நாள் முதலே அங்கு இருக்கும் ரசிகர்களும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக நடிகர் விஜய்யை பார்க்க படப்பிடிப்பு தளத்திலும், செல்லும் இடங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் விஜய் வாகனத்தின் மீது நின்று, ரசிகர்களிடம் பேசினார்.

அப்போது கேரள ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசி அசத்தினர். அதில் ஓணம் பண்டிகையின் போது நீங்கள் எந்த அளவுக்கு சந்தோசமாக இருப்பீர்களோ, அந்த அளவுக்கு உங்களின் முகத்தை பார்க்கும் பொழுது எனக்கு சந்தோசமாக உள்ளது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! நீங்க வேற லெவல் என கேரள ரசிகர்களிடம் விஜய் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *