1700 ஆம் நூற்றாண்டில் இருந்து இன்றைய காலக்கட்டத்திற்கு வரும் சூர்யா… கசிந்தது ரகசியம்

1700 ஆம் நூற்றாண்டில் இருந்து இன்றைய காலக்கட்டத்திற்கு வரும் சூர்யா… கசிந்தது ரகசியம்
  • PublishedMarch 20, 2024

சூர்யாவின் கங்குவா படம் வருடக்கணக்காக படமாக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஏற்கனவே சூர்யாவின் பிறந்தநாள் அன்று கிளிம்ஸ் வீடியோ வெளியாகி மிரட்டி இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் சூர்யாவின் தோற்றமும், ஆக்சன் காட்சிகளும் வேற லெவலில் இருந்தது. அதனாலேயே தற்போது இப்படம் 1000 கோடி வசூலுக்கு ரெடி என ரசிகர்கள் மார்த்தட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் கதை பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி டைம் டிராவல் ஃபார்முலா தான் இப்படத்தின் மையக்கரு. இது போன்ற பாணியில் தற்போது படங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் கங்குவா அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டுள்ளது. அதாவது 1700 ஆம் நூற்றாண்டில் இருந்து இன்றைய காலகட்டத்திற்கு சூர்யா வருவது தான் கதை.

அதனால் நடப்பது என்ன? எதற்காக அவர் வந்தார்? அவர் முடிக்க வேண்டிய கடமை என்ன? போன்ற கேள்விகளுக்கு ஆக்சனோடு விடை சொல்ல வருகிறது கங்குவா.

இப்படிப்பட்ட பார்முலாவை கையில் எடுத்திருக்கும் சூர்யா புது ட்ரெண்டையும் உருவாக்க வருகிறார். இப்படம் வந்த கையோடு இதே போல் அடுத்தடுத்த படங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *