விரைவில் விஜய் சேதுபதியோடு சாய் பல்லவி.

விரைவில் விஜய் சேதுபதியோடு சாய் பல்லவி.
  • PublishedFebruary 24, 2026

கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கி திரைக்கு வந்த படம் தக்லைப். கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் ,பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதன்பிறகு மணிரத்தினம்   ஒரு காதல் கதையை இயக்க உள்ளார் என்றும்,அந்த படத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் . இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *