வைரலாகும் திரை பிரபலங்களின் திருமண அழைப்பு பெட்டி .

வைரலாகும் திரை பிரபலங்களின் திருமண அழைப்பு பெட்டி .
  • PublishedFebruary 21, 2026

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியானது முதல் ,திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக இவர்களது திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த யாருக்கும் அழைப்பிதழ் தரவில்லை எனவும் திருமணம் நடக்கும் இடத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது  விஜய் – ராஷ்மிகா திருமண அழைப்பிதழ் பெட்டியில் உள்ள சில சுவாரஸ்யமான பொருட்கள் பேசு பொருளாக மாறியுள்ளன.

அதில் இருவரது பெயர்கள் பொறிக்கப்பட்டு அதற்குள் மஞ்சள் நிற அமரில்லிஸ் மலர்கள் மற்றும் பிங்க் நிற பீஸ் லில்லிகள் இருக்கின்றன. மேலும், நேஷன் க்ரஷ் என எழுதப்பட்ட பர்ஃப்யூம், ரவுடி என எழுதப்பட்ட மஞ்சள் நிற டி- ஷர்ட், கை – கால்களில் தேய்க்கும் ஆயுர்வேத க்ரீம், முந்திரி பருப்பு கொண்ட சின்ன பெட்டியும் இருக்கின்றன.

முன்னதாக திருமண பத்திரிகையில் விஜய் தேவரகொண்டா, “எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம். உங்கள் ஆசிர்வாதங்கள் எங்களுக்கு அர்த்தத்தை கொடுக்கும்” என எழுதியிருந்ததாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *