வைரலாகும் மகேஷ் பாபுவின் ‘வாரணாசி’ பட லுக்.

வைரலாகும் மகேஷ் பாபுவின் ‘வாரணாசி’ பட லுக்.
  • PublishedFebruary 22, 2026

பாகுபலி போன்ற பிரம்மாண்ட படமான வாரணாசி தயாரிப்பில் ராஜமௌலி தற்போது பிஸியாக உள்ளார். இது இந்தியாவின் மிக விலையுயர்ந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதேவேளை திரேதா யுகத்தில் படத்தின் ஒரு பகுதி நடப்பதாகவும், அதில் மகேஷ் பாபு ராமர் வேடத்தில் நடிப்பதாகவும் ராஜமௌலி உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது குறித்த ராமர் கெட்டப் லீக் என தகவல் பரவுகிறது.

குண்டூரில் உள்ள டிஜிட்டல் தியேட்டர் விளம்பர பலகையில் இந்த லுக் காணப்பட்டதாக ஒரு போஸ்டர் பகிரப்பட்டுள்ளது.

குறித்த வைரல் போஸ்டர், மகேஷ் பாபுவின் தீவிர தயாரிப்பையும், ராஜமௌலியின் இயக்கத்தில் படத்தின் பிரம்மாண்டத்தையும் காட்டுவதாக சொல்லப்படுகிறது. ராமர் உடையில், கையில் வில்லுடன் மகேஷ் பாபு நிற்பதாக அது காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *