சித்தார்த்-ஸ்ருதி பிரேக்கப்பிற்கு இந்த பிரபல ஹீரோ தான் காரணமாம்!
நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் சித்தார்த் ஆகியோர் ஆரம்ப காலங்களில் காதலித்து வந்தார்கள். இருவரும் ஹைதராபாத்தில் தங்கி இருந்தாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் ஸ்ருதி ஹாசனுக்கு சூர்யா நடிப்பில் உருவான 7-ம் அறிவு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யா ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கம் காட்டியதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
மேலும் இவர்கள் படப்பிடிப்பு இல்லாத நாளிலும் அவுட்டிங் சென்றார்களாம். இதனால் ஸ்ருதி மற்றும் சித்தார்த் இடையே சண்டை ஏற்பட்டதாம். இதன்காரணமாக அவர்கள் இருவரும பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆகவே இவர்கள் இருவரின் பிரிவுக்கு சூர்யா தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
சித்தார்த் தற்போது நடிகை அதிதி ராவ்வை காதலித்து வருகிறார்.