பிரபல நடிகையின் புகைப்படங்களை இனி பயன்படுத்த முடியாதா? – அதிரடி தீர்ப்பு
பிரபல நடிகை கஜோல் சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதை தடுக்க கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது அது தொடர்பில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
குறித்த தீர்ப்பின்படி வணிக நோக்கில் கஜோலின் பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்துடன், நடிகையின் உருவத்தை ஒத்த ஏஐ (Artificial Intelligence) னால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களையும், அனுமதியின்றி வெளியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.