14 வருடங்களாக தீராத பகை – தீர்த்து விட களத்தில் இறங்கிய பிரபலம் : இழுபறியில் இருக்கும் அஜித் படம்!

14 வருடங்களாக தீராத பகை – தீர்த்து விட களத்தில் இறங்கிய பிரபலம் : இழுபறியில் இருக்கும் அஜித் படம்!
  • PublishedJune 15, 2023

நடிகர் அஜித்தினுடைய விடாமுயற்சி திரைப்படம் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தில் நடத்த ரைட் மிகப் பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இயக்குனர்கள், கதை திருப்தியின்மை என பல பிரச்சினைகளை சந்தித்த இந்த படம் தற்போது பணப்பிரச்சினையினையும் சந்தித்துள்ளது. ஆகையால் படப்பிடிப்பு பணிகள் இழுப்பறி நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்திற்காக லைகா நிறுவனம் பெரும் புள்ளியிடம் உதவி கோரியுள்ளது. ஆனால் அந்த பெரும் புள்ளிக்கும் அஜித்திற்கும் இடையில் 14 வருடங்களாக பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.

அது வேறு யாருமல்ல. மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியனிடம் தான் லைகா நிறுவனம் உதவி கோரியுள்ளது. முன்னதாக அன்புச் செழியன் அஜித் படத்தின் தயாரிப்பு பணிகளில் மறைமுகமாக உதவி செய்து வந்தார். இந்த விடயத்தில் அஜித் தலையிடவில்லை.

என்றாலும், விடா முயற்சி படத்தில் அஜித் கொஞ்சம் கராராக  இருக்கிறாராம். லைகா நிறுவனத்திற்கு போன் செய்து  தன்னுடைய படத்திற்கு உதவி செய்யும் அவசியம் இல்லை என்று  கூறியிருக்கிறாராம். இப்படி அஜித் படம் தொடர்ந்து சிக்கலில் மாட்டி தவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *