வெளியேறினார் ரஜினி… வந்தார் அருண் விஜய்… மாஸ் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான லால் சலாம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் அதே பொங்கல் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சினிமா திரையுலகில் மட்டுமல்ல, ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 4 திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிபோகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அருண் விஜய் நடித்த ’மிசின் 1’ என்ற திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. லைக்கா நிறுவனத்தின் இரண்டு படங்கள் பொங்கல் ரேஸில் இருப்பதால், ஏதாவது ஒரு படம் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
அதே போல சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, லால் சலாம் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் இன்னும் விற்கப்படவில்லை என்பதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..