நயன்தாராவிற்கு வில்லியாக ரீ என்ட்ரி கொடுக்கும் 40 வயது நடிகை!

நயன்தாராவிற்கு வில்லியாக ரீ என்ட்ரி கொடுக்கும் 40 வயது நடிகை!
  • PublishedMay 10, 2023

தமிழ் படம்,  விக்ரம் வேதா,  மண்டேலா போன்ற படங்களை தயாரித்த ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் தன்னுடைய 23 வது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ‘டெஸ்ட்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில்  சித்தார்த்,  மாதவன்,  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் இணைந்திருக்கும் இந்த படத்தின் மூலம்   மீரா ஜாஸ்மின் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகி பயங்கர பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தற்போது மீரா ஜாஸ்மின் இணைந்து இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *