மனோ பாலாவின் இறுதி நிமிடங்கள் : சோசியல் மீடியாவில் வைரலாகும் காணொலி!

மனோ பாலாவின் இறுதி நிமிடங்கள் : சோசியல் மீடியாவில் வைரலாகும் காணொலி!
  • PublishedMay 10, 2023

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பம்பரமாக சுற்றி வந்த மனோபாலா கடந்த மூன்றாம்  திகதி  உடல் நலக்குறைவின் காரணமாக உயிர் நீத்தார்.  அதைத்தொடர்ந்து அவருடைய நினைவுகளை பலரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மனோபாலாவின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் தற்போது அவர் தன் குடும்பத்தினருடன் இருக்கும் கடைசி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Actor Manobala Death: நடிகர் மனோ பாலா காலமானார்-actor and director mano  bala passed away - HT Tamil

அதில் மனோபாலா உடல் நலம் குன்றிய நிலையில் இருக்கிறார். அவருடைய கையை ஆதரவாக பிடித்திருக்கும் அவருடைய மகன் ஹரிஷ் அவரிடம் பேசியபடி அமர்ந்திருக்கிறார். மேலும் உங்களுக்கு பிடித்த பாடலை பாடட்டுமா என்று கேட்கும் அவர் ஒரு பாடலையும் தன் அப்பாவுக்காக பாடுகிறார்.

அதைக் கேட்ட மனோபாலா கண்கலங்கிய படி அமர்ந்திருக்கிறார். மேலும் அவருடைய உதவியாளர் அவரை குதூகலப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டே உணவு ஊட்டுவது,  தண்ணீர் கொடுப்பது என்று அவரை குழந்தை போல கவனிக்கிறார். தற்போது குறித்த காணொலி வைரலாக பரவி இதயத்தை கனக்கச் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *