5 தசாப்தங்களுக்கு முன்னரே சாதித்து காட்டிய கமல் – வெளிவந்த முக்கிய தகவல்

5 தசாப்தங்களுக்கு முன்னரே சாதித்து காட்டிய கமல் – வெளிவந்த முக்கிய தகவல்
  • PublishedMarch 19, 2023
  உலக நாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரம் முதல் கதாநாயகன் வரை தனக்கான இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் தனது அசாத்தியமான நடிப்புத் திறமையினால் 50 வருடங்களுக்கும் மேலாக கமல் சாதனை படைத்து வருகின்றார். நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். அவர் இப்போது மட்டுமல்ல சினிமா உலகிற்கு வந்த நாளிலிருந்து அவரது அசாத்தியமான நடிப்பு திறமை ரசிகர்களாலும் திரை விமர்சகர்களாலும் மிகவும் பாராட்டப்பட்டு இருக்கிறது. இது பற்றிய ஒரு சம்பவத்தை தான் சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் வீடியோ ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அந்த காலத்தில் நாடக உலகில் புதுமைகளை அறிமுகப்படுத்தி வந்தவர்கள் டி கே எஸ் சகோதரர்கள். இவர்கள் முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை வைத்து 1965 ஆம் ஆண்டில் நாடகம் ஒன்றை இயற்றினர். அந்த நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய கமல்ஹாசன் குமரன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனைப் பற்றிய 1965 ஆம் ஆண்டிலேயே ஆனந்த விகடன் பத்திரிக்கை எழுதி இருக்கிறது என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் உலக நாயகனின் அசாத்திய திறமையை நாம் அறிந்து கொள்ளலாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *