குந்தவையை விட கம்மியாக கொடுக்கப்பட்ட சம்ளம் – மாஸ் ஹீரோவிக்கு இந்த நிலையா?
மணிரத்தினம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குந்தவை திரிஷாவை விட கம்மியாக இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28 ஆம் திகதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், படம் முழுக்க பயணித்த வந்தியத்தேவன் கார்த்திக்கு திரிஷாவை விட கம்மியாக சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவிற்கு 5.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அரண்மனையில் அலுகாமல் குலுங்காமல் நடித்த திரிஷாவை விட போர்க்களத்தில் படாத பாடுப்பட்ட கார்த்திக்கு கம்மியாக சம்பளம் கொடுத்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல ரொமான்டிக் ஹீரோவாக படத்தில் இருக்கும் பெண்களை எல்லாம் டாவடித்துக் கொண்டிருக்கும் வந்தியத்தேவனுக்கு இவ்வளவுதான் சம்பளமா என்று இந்த விஷயத்தை சோசியல் மீடியாவில் ஆச்சரியத்துடன் ஷேர் செய்து கொண்டிருக்கின்றனர்.