முதல்முறையாக அயன்மேன் நடிகர் ‘ராபர்ட் டவுனி” ஜூனியர் ஆஸ்கர் வென்றார்
96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.
96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது விழாவிற்கு வருகை தந்த பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக திரைப்பிரபலங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர்.
பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், ஓபன்ஹெய்மர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். அவர் ஓப்பன்ஹெய்மர் படத்தில் லூயிஸ் ஸ்ட்ராஸ் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.
முதல் முறையாக ஆஸ்கர் விருதை பெற்ற ராபர்ட் டவுனி ஜூனியர், இந்த விருது எனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த விருது என்றார். கிறிஸ்டோபர் நோலனின் ரியர் அட்மிரல் லூயிஸ் ஸ்ட்ராஸாக நடித்ததற்காக கோல்டன் குளோப்ஸ், பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் விருதுகள் மற்றும் விமர்சகர்களின் சாய்ஸ் மூவி விருதுகள் உட்பட அனைத்து முக்கிய விருதுகளையும் ஓபன்ஹெய்மர் இன்று பெற்றுக் கொடுத்தது.
தற்போது, ஆஸ்கர் விருதையும் பெற்றுக்கொடுத்துள்ளது. இதற்காக இயக்குநர் . கிறிஸ்டோபர் நோலனுக்கு மிக்க நன்றி என்றார்.
பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலை அள்ளியது. அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும், ஓபன்ஹெய்மரின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. பல தரப்பில் இருந்து பாராட்டுக்களை பெற்ற இத்திரைப்படம் கோல்டன் குளோப் விருதையும் வென்றது.