கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜரகண்டி பாடல் எப்படி இருக்கு?
இயக்குநர் ஷங்கர் படங்களுக்கு அதிகம் செலவு செய்வதை விட பாடல்களுக்கு அதிக செலவு செய்து விடுவார்.
நண்பன், ஐ, 2.0 படங்கள் சொதப்பிய நிலையில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை பல வருடங்களாக இயக்கி வருகிறார். அந்த படம் திடீரென கிடப்பில் போடப்பட்ட நிலையில், தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானியை வைத்து கேம் சேஞ்சர் படத்தை ஆரம்பித்த ஷங்கர் மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்கிய நிலையில், கேம் சேஞ்சர் படத்தையும் தாமதப்படுத்தி வருகிறார்.
ராம்சரண் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தற்போது கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஜரகண்டி பாடல் லிரிக் வீடியோ வெளியாகி இருக்கிறது.
திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஜரகண்டி ஜரகண்டி என வேகமாக செல்லுங்கள் என பிடித்து இழுத்து தள்ளி விடுவார்கள்.
ஜரகண்டி என பாடலை வைத்துக் கொண்டு கேம் சேஞ்சர் படம் ஜரகண்டியாக வராமல் மாட்டு வண்டியாக பொறுமையாக உருட்டிக் கொண்டே இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள கேம் சேஞ்சர் படத்திற்கு ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்த தமன் இசையமைத்துள்ளார்.
வழக்கமாக தெலுங்கு படங்களுக்கு போடும் மியூசிக் போலவே இந்த பாடலுக்கும் இசையமைத்துள்ளார். பிரபுதேவாவின் கொரியோகிராஃபி, ராம்சரண் மற்றும் கியாரா அத்வானியின் நாட்டுக்கூத்து ஸ்டைல் டான்ஸ் தான் இந்த பாடலை காப்பாற்ற வேண்டும்.
லாரிக்கு கலர் கலரா பெயின்ட் அடிப்பதில் தொடங்கி ஒரு ஊரையே பெயின்ட் அடித்து செட் போட்டு, வானத்துக்கு செல்வது போல ஒரு தார் சாலையையும் அமைத்துள்ளனர். இதையெல்லாம் பார்த்த நொடியிலேயே அந்நியன் படத்தில் இடம்பெற்ற “அண்டங்காக்கா கொண்டக்காரி” பாடல் தான் இமிடியேட்டாக நினைவுக்கு வருகிறது. கியாரா அத்வானி மற்றும் ராம்சரண் உடைகளும் அதே போலவே இருக்கிறது.