நடிகை தீபிகா படுகோனின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகை தீபிகா படுகோனின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedJune 1, 2025

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா. 39 வயதான நடிகை தீபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2024 செப்டம்பர் மாதம் இத்தம்பதியர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றப்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் தீபிகா படுகோன்.

ஒரு படத்தில் தீபிகா நடிக்க சுமார் 15 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார். அப்படி அவர் சம்பாதித்து 500 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் ஸ்பிரிட் படத்தில் நடிக்குமாறு இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி கேட்டபோது 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க கேட்டும் சில கண்டீசன்கள் போட்டும் இருக்கிறார். இதனால் அப்படத்தில் இருந்து தீபிகா நீக்கப்பட்ட விஷயம் பெரியளவில் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் தீபிகா படுகோன், பாலிவுட் சினிமாவில் ஓம் சந்தி ஓம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார். அப்படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளாராம்.

இந்த வாய்ப்பே பெரிய விஷயம், எனக்கு பிடித்த ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க சம்பளம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி இலவசமாக அப்படத்தில் நடித்து கொடுத்திருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *