போதைப்பொருள் விவகாரம் – அருண் விஜய் கொடுத்த தக் லைஃப் பதில்

போதைப்பொருள் விவகாரம் – அருண் விஜய் கொடுத்த தக் லைஃப் பதில்
  • PublishedJune 30, 2025

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காகவும் வீட்டில் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகவும் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார், போதைப்பொருள் விவகாரத்தில் அவரையடுத்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.

இவர்களை தொடர்ந்து பலரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், இதுகுறித்து அருண் விஜய் கொடுத்த ரியாக்ஷன் தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அவர் நடிப்பில் தடையறத் தாக்க படம் சில நாட்களுக்கு முன் ரீ-ரிலீஸானது.

அப்படத்தின் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட அருண் விஜய்யிடம், போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்கள் சிக்குவது பற்றிய உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அருண் விஜய், நோ கமெண்ட்ஸ், நான் இங்கே என் பட நிகழ்ச்சிக்குத் தான் வந்திருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து படம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து அங்கிருந்து சென்றிருக்கிறார் அருண் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *